கோவை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ப்ரூக் ஃபீல்ட்ஸ் வணிக வளாகத்தில் பல்வேறு பரிசுப் பொருட்களுடன் சிறந்த காதி ஆடை விற்பனை நடைபெற்று வருகிறது.

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் காதி ஆடைகளை பொதுமக்கள் உடுத்த வேண்டும் என அரசு மற்றும் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், காதி ஆடைகளை உடுத்தி நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், கோவையில் உள்ள ப்ரூக் ஃபீல்ட்ஸ் வணிக வளாகத்தில் இருக்கும் காதி ஆடைகள் விற்பனையகத்தில் அதிரடி சலுகைகளுடன் கூடிய காதி ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு, பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஆடை வடிவமைப்புத்துறை மாணவர்களின் கைவண்ணத்தால் உருவாக்கப்பட்ட காதி ஆடைகள் மற்றும் காதி கிரமோடியாக் பவனின் சிறப்பு ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு விற்பனைக்கு இருக்கும் புதுமையான அனுபவமிக்க, சிறந்த காதி ஆடைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.