திருப்பூர் : முறையான மின் விநியோகம் செய்யாத மின்வாரியத் துறை அதிகாரிகளைக் கண்டித்து திருப்பூரில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் கோவில் வழி பகுதியில் உள்ள சேரன் நகர், தில்லை நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த ஒரு வாரகாலமாக மழை பெய்து வரும் நிலையில், சரியான சாலை வசதி இல்லாததால் மழை நீரால் சாலைகள் சேரும் சகதியுமாக காணப்படுகின்றன. மேலும், மழை நேரத்தில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் 4 தினங்களாக சரிவர விநியோகிக்காமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

எனவே, அலட்சியமாகச் செயல்படும் மின்வாரிய அதிகாரிகளைக் கண்டித்து பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடனடியாக மின்விநியோகம் சரி செய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.