தந்தை பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு : புகாரை ஏற்க மறுப்பதாகக் கூறி தாயுடன் சேர்ந்து கோவை மாடல் அழகி ரகளை

கோவை : தந்தை அளிக்கும் பாலியல் தொந்தரவு தொடர்பான புகாரை காவல்நிலையத்தல் ஏற்க மறுத்த நிலையில், தாய் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தந்தை பணிபுரியும் நிறுனத்தில் மாடல் அழகி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



கோவை : தந்தை அளிக்கும் பாலியல் தொந்தரவு தொடர்பான புகாரை காவல்நிலையத்தல் ஏற்க மறுத்த நிலையில், தாய் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தந்தை பணிபுரியும் நிறுனத்தில் மாடல் அழகி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சென்னையைச் சேர்ந்தவர் ஜோசப் சுரேஷ் (46). இவர், கோவை - அவினாசி சாலையில் உள்ள 'ரேவந்தா கன்சல்டன்ஸி' என்ற கட்டுமான நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்து வருகின்றார். இவரது மனைவி ஸ்வர்ணலதா (42) மற்றும் மகள் டயானா (19) ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் குடியேறினர். டயானா கல்லூரியில் படித்து வருவதுடன், மாடலிங் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றார். இவர், 'குயின் ஆப் சென்னை 2018' விருதும் பெற்றுள்ளார். 

இந்த நிலையில், இன்று ஜோசப் சுரேஷ் பணிபுரியும் நிறுவனத்திற்குச் சென்ற அவரது மனைவி ஸ்வர்ணலதா, மகள் டயானா ஆகியோர் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது, தந்தை ஜோசப் சுரேஷ் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும், இது தொடர்பாக இன்று இராமநாதபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தால் வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாகவும் மகள் டயானா குற்றம்சாட்டினார். மேலும், குடும்ப செலவுகளுக்கு பணம் கேட்டால் கொடுக்க மறுப்பதாகவும் அவர் கூறினார்.

குடும்பத்துடன் வந்து நிறுவனத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட நிலையில், இது குறித்து தனியார் நிறுவன ஊழியர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, தந்தை தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வருவதாகவும், கடந்த ஒரு மாதமாக இந்த தொந்தரவு அதிகரித்து இருப்பதாகவும் ஜோசப் சுரேஷின் மகள் டாயானா புகார் தெரிவித்தார்.

மேலும், மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தால் அலட்சியமாக பேசுவதாகக் கூறிய டயானா, ஆணையாளர் தனது நண்பர் என்பதால் தன்னை எதுவும் செய்ய முடியாது என தந்தை ஜோசப் சுரேஷ் மிரட்டுவதாகவும், 9 ம் வகுப்பு படிக்கும் போது இருந்தே தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும் கூறினார். மேலும், தனது உறவினர்களிடமும், தாத்தா, பாட்டியிடம் சொன்னாலும் கூட அவர்கள் கண்டு கொள்ளவில்லை என அவர் வேதனை தெரிவித்தார். 

அதோடு, தனது தந்தைக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அதனால்தான் தங்கள் குடும்பத்திற்கு பணம் கொடுப்பதில்லை எனவும் தந்தை ஜோசப் சுரேஷ் மீது மகள் டயானா குற்றம்சாட்டியுள்ளார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...