கோவை : குட்கா, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அதிகம் உள்ள பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் சமூக விரோதிகள் மூலம் கஞ்சா, குட்கா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதனை மாணவர்கள் உட்கொள்வதால் அவர்களது எதிர்காலம், உடல்நலம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், அனுமதியற்ற உணவு விடுதிகளில் (தாபா) மதுவிற்பனை நடைபெறுவதைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.