கோவை : மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓடைகளை முறையாக பராமரிக்கக் கோரி கோவை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயனை நேரில் சந்தித்து தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் மனு அளித்தார்.

இந்த சந்திப்பின் போது, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓடைகளை முறையாகப் பராமரிக்காததால், மழை பெய்யும் போது சாக்கடை கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "நொய்யல் வழிப்பாதை மற்றும் சங்கனூர் ஓடையை முறையாக தூர்வாராததால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் சாக்கடை கழிவு நீர் புகுந்து விடுகின்றது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக ஓடைகளை தூர்வார வேண்டும். குடிநீர் குழாய் மாற்றியமைக்க அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மோசமாக உள்ள கால்வாய்கள் தொடர்பாகவும் ஒரு பட்டியலை தயார் செய்து மாநகராட்சி ஆணையாளரிடத்தில் அளித்துள்ளதாக எம்.எல்.ஏ. நா.கார்த்திக் தெரிவித்தார்.
மேலும், 41-வது வட்டம், வடக்கு தொகுதிக்கு உட்பட்ட கணபதி மாநகர் பகுதியில் இரண்டரை இன்ச் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது, அங்கு 4 இன்ச் குழாய் மாற்றும் பணி நடைபெறுகின்றது. இதற்கு அப்பகுதியில் இருக்கின்ற 1,110 வீடுகளில் மாற்றுவதற்கு, மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
செளரிபாளையம், ஹட்கோ காலனியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளின், மனித கழிவுகள் வெளியேற முடியாமல் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்தப் பகுதியில் பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட வேண்டும்.
இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மோசமான சாலைகளை புதுப்பிக்க வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையாளரிடத்தில் அவர் வேண்டுகோள் விடுத்ததாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, தி.மு.க. மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், பகுதி கழக பொறுப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், அணி அமைப்பாளர்கள் மற்றும் வட்டக்கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.