கோவை: கோவை மாநகராட்சியில் சொத்துவரி உயர்வைக் கண்டித்து வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் திருவோட்டுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியில் சொத்து வரியை 50 முதல் 100% வரை வரியை உயர்த்தி உள்ளதைக் கண்டித்து இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் திருவோட்டுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி மன்றம் செயலில் இல்லாத காரணத்தாலும், தற்காலிக செயல் அலுவலர் மட்டுமே உள்ள நிலையில் வரி உயர்வு போன்ற முடிவுகளை எடுத்து இருப்பது விதிமுறைகளுக்கு எதிரானது என தெரிவித்தவர்கள், இதன் காரணமாக வீடு, வியாபார நிறுவனங்களின் வாடகை உயரும் என குற்றம்சாட்டினர்.
எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.