திருப்பூர்: உடுமலை அருகே கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள வேடசந்தூா் கோவிலுக்கு கிருஷ்ணமூர்த்தி (42) என்பவர் தனது மனைவி கலைச்செல்வி, குழந்தை ஹா்சினி (6) மற்றும் உறவினர் மனோஜ்குமார் ஆகியோருடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.
அவர்கள் கார் மடத்துக்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி, காரின் மீது நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் கார் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டதில் அதில் பயணம் செய்த நான்கு பெரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பியோடினார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் அவர்களது உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.