எதிர்வரும் தேர்தலுக்காக பலத்த பாதுகாப்புடன் கோவை வந்தடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

கோவை: நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூரில் இருந்து கோவை கொண்டுவரப்பட்டது.

பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து 7,370 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பதை தெரியப்படுத்தும் (VVPAT) வோட்டர் வெரிபைடு பேப்பர் ஆடிட் டிரையல் என்ற கட்டுப்பாட்டு கருவி  4000-மும் இன்று கோவை வந்தடைந்தன.

நான்கு வாகனங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த இயந்திரங்கள் கோவை சுதாரத்துறை அலுவலகத்திற்கு இன்று காலை வந்தடைந்தன. மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிசந்திரன் முன்னிலையில், மின்னணு வாக்கு பெட்டிகள் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இயந்திரங்களுக்கு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், தெற்கு வட்டாட்சியர் சியாமளாதேவி, வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) தனலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...