நீலகிரி: கோத்தகிரியில் இருந்து கேரளா மாநிலத்திற்கு ரேசன் அரிசியை கடத்த முயன்றவர்களை சினிமா பாணியில் விரட்டி கைது செய்துள்ளது நீலகிரி மாவட்ட காவல்துறை.

கோத்தகிரி பகுதியில் மது விலக்கு காவலர்களான நசீர் மற்றும் கவுதமன் ஆகியோர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நட்டக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையிலிருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

பேரில் நட்டக்கல் பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு நிறுத்தி வைத்திருந்த லாரியை சோதனை செய்தனர். இதில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 33 மூட்டைகளில் 2000 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட முயன்ற நான்கு பேரிடம் விசாரிக்கச் சென்றனர்.
போலீசார் வருவதை அறிந்த அவர்கள் நால்வரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் ஓடிய அவர்களை போலீசார் விரட்டிப்பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், கூடலூரைச் சேர்ந்த பாதுஷா(19), தவுலத்(28), சியாபுதின்(34), விக்னேஸ்வரன்(43) என்பது தெரியவந்தது.
இதில் லாரி ஓட்டுநர் ராஜா மட்டும் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.