திருப்பூர்: திருப்பூரில் 2000 ரூபாய் ஜெராக்ஸ் நோட்டுக்களை மாற்ற முயன்றவர்களை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் வசித்து வரும் ஹாரூன் என்பவரிடம், வீராணம்பாளையம் சத்யா நகரைச் சேர்ந்த சதீஷ், ராஜ்குமார் என்ற இருவரும் தங்களிடம் அதிக அளவில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் உள்ளதாகவும், ஒரு இரண்டாயிரம் ரூபாய் தாளுக்கு ஆயிரம் மட்டும் கொடுத்தால் போதும் என ஆசை வார்த்தை தெரிவித்துள்ளனர்.
மேலும், முதலில் தங்களிடம் 8 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் உள்ளதாகவும் அதற்கு 8 ஆயிரம் ரூபாய் மட்டும் தருமாறும் தெரிவித்துள்ளனர். இவர்கள் கூறியதை கேட்ட ஹாரூன் சந்தேகமடைந்துள்ளார். எனவே தனது நண்பர் மணிமாறன் உதவியுடன் காங்கேயம் பழைய கோட்டை சாலையில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை தர வந்த சதீஷ், ராஜ்குமார் இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்த காங்கேயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரித்ததில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. மேலும், வடுகபாளையத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவரிடமிருந்தே இந்த ஜெராக்ஸ் நோட்டுக்கள் வாங்கப்பட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து, சாமிநாதனையும் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து கள்ள நோட்டு அச்சடிக்கப் பயன்படுத்திய ஸ்கேனர், லேப்டாப், கலர் பிரிண்டர் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.