திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பழையகோட்டையில் செயல்பட்டு வரும் காங்கேயம் நாட்டு மாட்டுச் சந்தையானது தொடர்ந்து செயல்பட்டு இன்று 100-வது வாரத்தை எட்டிப்பிடித்துள்ளது.இதனை ஒட்டி சந்தையானது தென்னை ஓலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் இன்று தொடங்கி நடைபெற்றது.

காங்கேயம் இன கால்நடைகளுக்கான பிரத்யேக சந்தையானது கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இதில் காங்கேயம் இன கால்நடைகள் மட்டுமே வாங்கவும்-விற்கவும் அனுமதிக்கப்படுகிறது.

மேலும் விவசாயிகள் நேரடியாக தங்களது காங்கேயம் இன கால்நடைகளை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்கவும்,வாங்கவும் ஏற்படுத்தப்பட்ட இச்சந்தையில் ஒரு கால்நடை மருத்துவர் கண்காணிப்பில் கால்நடைகள் நோய் கண்டறிதல், மாடுகளின் சினையை கண்டறிய அல்ரா சவுண்ட் ஸ்கேன் கருவியும் வைக்கப்பட்டு கால்நடைகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு சந்தை செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக விவசாயிகளே நேரடியாக கால்நடைகளுக்கு விலை நிர்ணயம் செய்து வாங்கிச்செல்லும் முறையால் அண்டை மாவட்டங்களான ஈரோடு, கரூர், கோவை, தருமபுரி, சேலம், திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் காங்கேயம் இன கால்நடைகளை வாங்கவும், விற்கவும் இச்சந்தைக்கு வருவது அதிகரித்தது.
கடந்த 2016 ஆம் ஜல்லிக்கட்டு பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து நாட்டு மாடுகள் வளர்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், விவசாயிகள் பொதுமக்களிடையே மேலும் பரவலாக நாட்டுமாடு வளர்ப்பை அதிகரிக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட இச்சந்தை தொடர்ந்து செயல்பட்டு 100 வது வாரத்தை எட்டிப்பிடித்து வெற்றிகரமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சந்தை தொடங்கப்பட்டதில் இருந்து ரூ.30 கோடி மதிப்பிலான 7 ஆயிரம் மாடுகள் விற்பனையானதாக சந்தை பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.