கோவை: கோவையில் ஐந்து மையங்களில் நடைபெற்ற காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை, 8 மாவட்டங்களைச் சேர்ந்த 4,331 பேர் எழுதினர்
கோவை: கோவையில் ஐந்து மையங்களில் நடைபெற்ற காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை, 8 மாவட்டங்களைச் சேர்ந்த 4,331 பேர் எழுதினர்.
தமிழகக் காவல்துறையில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பிரிவு சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. கோவை மாநகரில் 5 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இங்கு மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தேர்வெழுதினர்.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. காலை 8 மணி முதல், நுழைவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை ஆகியவை சரி பார்க்கப்பட்டு தேர்வர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கேமரா, ஸ்மார்ட் கடிகாரம் போன்றவற்றை தேர்வர்கள் கொண்டுவர அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்களில் கோவை மாநகரக் காவல் ஆணையர் கே.பெரியய்யா, டிஐஜி கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தேர்வு மையங்கள் மற்றும் அவற்றில் தேர்வெழுதியவர்கள் வீடியோ கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்பட்டனர். நேற்று நடைபெற்ற தேர்வை எழுத 5,720 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 4,331 பேர் கலந்து கொண்டனர். 1,389 பேர் தேர்வெழுத வரவில்லை.
மையங்கள் வாரியாக தேர்வெழுதியவர்களின் விவரம்:
நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் (எஸ்.என்.ஆர்) 1000, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 400 பேரும், பீளமேடு பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் 1,200, ஜிஆர்டி அறிவியல் கல்லூரியில் 1,394, காளப்பட்டி டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் 1,726 பேரும் தேர்வெழுதினர்