நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளாவில் மக்கள் நல வாழ்வு மையத்தை துவக்கி வைத்த பின் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மிகவும் தாமதமாக செயல்படுகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதில் காலதாமதம் செய்தது தமிழக அரசு.

தற்போது பல்வேறு நடைமுறைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதால் தாமதமானாலும் நிச்சயமாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். தமிழக-கேரள எல்லை தமிழக-கர்நாடக எல்லை தமிழக-ஆந்திர எல்லை போன்ற இடங்களில் தமிழகத்தை தீவிரவாதிகள் ஆயுதம் வைத்து தாக்கக் கூடும் எச்சரிக்கை செய்துள்ளேன்.
இதனை பல முறை சுட்டிக்காட்டியும் உள்ளேன். அரசு தயாராக இருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரியை அமைப்பது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை மத்திய சுகாதாரத்துறை மற்றும் தமிழக முதல்வரிடம் நேரடியாக கோரிக்கை வைக்கப்படும்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பில்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதற்கு காந்தி கூறியது போல், தனியாக ஒரு பெண் நள்ளிரவில் சென்று வர முடியுமா? என்று நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

தேர்தல் கூட்டணி குறித்து அந்த நேரத்தில் முடிவெடுக்கப்படும்." என்றார்.