திருப்பூர்: ப்ரிஸ்மா லெக்கின்ஸ் நிறுவனத்தின் பெயரில் போலியாக ஆடை தயாரித்து விற்பனை செய்து வந்தவரை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்
திருப்பூர்: ப்ரிஸ்மா லெக்கின்ஸ் நிறுவனத்தின் பெயரில் போலியாக ஆடை தயாரித்து விற்பனை செய்து வந்தவரை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூரில் கோபாலகிருஷ்ணன் என்பவர் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பு பெயரை (ப்ரிஸ்மா லெக்கின்ஸ்) பயன்படுத்தி போலி ஆடைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து கோபாலகிருஷ்ணன் திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சாமுண்டிபுரம் பகுதியில் முகமது ரபீக் என்பவர் போலியாக தரமற்ற ஆடைகளை தயார் செய்து ப்ரிஸ்மா லெக்கின்ஸ் பெயரில் விற்பனை செய்து வந்ததை அறிந்து அவரை கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்த 100-க்கும் மேற்பட்ட பின்னலாடைகளையும் பறிமுதல் செய்தனர்.