நீலகிரி: தென்னிந்தியாவில் ஏற்பட்ட வறட்சி மற்றும் எதிர்பாராத கன மழையால் தோட்டத்துறைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் (உபாசி) தலைவர் டி.ஜெயராம் வருத்தம் தெரிவித்தார்.

தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க 125-வது மாநாடு நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் டி.ஜெயராம் பேசியதாவது:-
தோட்டத்துறை 25 கோடி மக்களுக்கு நேரடியாகவும், பல கோடி மக்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. ஊரக பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் தோட்டத்துறை பெரும் பங்கு வகிக்கிறது.

தோட்டத்துறையின் கீழ் உள்ள தேயிலை, காபி, ரப்பர் சாகுபடியில் அதிகரித்துள்ள உற்பத்தி செலவு, காலநிலை மாற்றம், வறட்சி, எதிர்பாராத மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேயிலை உற்பத்தி இந்தியாவில் 54 மில்லியன் கிலோவாக உள்ளது. இதில், தென்னிந்தியாவில் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 22 மில்லியன் கிலோவாக இருந்தது. மேலும், தேயிலை ஏற்றுமதி 4.5 மில்லியன் கிலோவாக இருந்தது. ஆனால், தேயிலையின் விலை கிலோ ரூ.104-லிருந்து ரூ.97-ஆக குறைந்தது.
காபி விலை அராபிக்கா கிலோ ரூ.130 மற்றும் ரோபஸ்டா ரூ.60 ஆக சரிந்தது. எதிர்பாராத மழை காரணமாக 1 லட்சத்து 25 ஆயிரம் டன் ரப்பர் உற்பத்தி சரிந்துள்ளது. மேலும், கிலோ ரூ.130 தான் கிடைக்கிறது. அதே போல ஏலக்காய், குறுமிளகு உற்பத்தி கடந்தாண்டை விட பாதியளவு குறைந்து விட்டது.
இதனால், தோட்டத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக ரசாயன உரங்கள் பயன்பாடு, தொடர் சாகுபடியால் நிலம் மலடாகி வருகிறது. இதனாலும், பேரிடர்களாலும் மேல் மண்ணை இழந்து வருகிறோம்.

முறையான தண்ணீர் மேலாண்மை, கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துல் தேவை. உலகில் 71 சதவீத தண்ணீரை வேளாண்மைக்கு தான் பயன்படுத்துகிறோம். மாசு அதிகரித்து வருவதால் நல்ல நீரின் அளவு குறைந்து வருகிறது. இதனால், குறைந்த தண்ணீர் அதிக மகசூல் செய்யும் வேளாண் முறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் மத்திய வர்த்தக துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொள்ள முடியாததால் காணொளி காட்சி மூலம் பேசினார். அப்போது தோட்ட அதிபர்களுக்கு எழுந்துள்ள பிரச்சினை குறித்து விரைவில் தன் சார்பாக பிரதிநிதி அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.