கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது
கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த வாரம் தொடங்கிய மழை இரண்டு தினங்களுக்கு முன்பு ஓய்ந்தது. தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்கள் கோவையில் வெப்ப சூழல் நிலவியது. இந்த சூழலில், இன்று காலை கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை முதல் உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளை விட்டு வெளியில் வராமல் உள்ளனர்.
உங்கள் பகுதிகளில் மழை நிலவரத்தை கமெண்ட் செய்யலாம்..