நீலகிரி : இந்தியாவில் உள்ள ஒரேயொரு நூற்றாண்டு பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி என்ஜின் வெள்ளோட்டம் வெற்றி பெற்றதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் உதகை மலை ரயில் முக்கிய இடம் பெறுகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை 46.5 கி.மீ., கொண்ட இந்த மலை ரயில் பாதையின் இருபுறங்களிலும் அழகிய இயற்கை காட்சிகள் காணப்படுகின்றன. மேலும், மலை ரயில் பயணத்தின் போது வனப்பகுதியில் உலாவும் காட்டு விலங்குகளையும் கண்டு ரசிக்கலாம். மலைப்பாதை தண்டவாளத்தில் பல் சர்க்கரம் மூலம் ரயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆசியாவிலேயே உதகை மலை ரயிலில் தான் பல்சர்க்கர தண்டவாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய அந்தஸ்து வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்றாக பாரம்பரியமிக்க மலைரயில் இடம்பெற்றுள்ளது. இந்த மலைரயிலில், பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த நூற்றாண்டு பழமைமிக்க நிலக்கரி நீராவி என்ஜினை (X37384) மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவிலேயே நிலக்கரியில் இயங்கக் கூடிய என்ஜின் (X37384) ஒன்று மட்டுமே உள்ளது.
இதனைப் பாதுகாக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்விக்கும் வகையில் கடந்த மாதம் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னுார் பணிமனைக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த என்ஜினை சரிசெய்து பராமரித்து குன்னுாரிலிருந்து உதகை வரை வெற்றிகரமாக இன்று வெள்ளோட்டம் இயக்கப்பட்டது. இதையடுத்து, விரைவில் குன்னுாரிலிருந்து மேட்டுப்பாளையம் வரை நுற்றாண்டு பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி என்ஜின் இயக்கப்படும் என்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.