திருப்பூர்: தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் அவினாசி அருகே உள்ள நல்லாற்றங்கரை பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு அவினாசி, பழங்கரை, கருவலூர், ஆட்டையம்பாளையம், சேவூர் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதையடுத்து, இன்று காலை முதல் அவினாசியில் உள்ள பழமை வாய்ந்த தாமரை குளம் மற்றும் சங்குமாங்குளம் ஆகிய குளங்களுக்கு மழைநீர் வரத்து தொடங்கியது. இதனால், குளங்களில் நீர்வரத்து அதிகரித்து, கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நல்லாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து லேசான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.