திருப்பூர் : உடுமலை திருமூா்த்தி அணைப்பகுதியில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு கம்பிவேலியினை கால்நடைத்துறை அமைச்சர் இராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் : உடுமலை திருமூா்த்தி அணைப்பகுதியில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு கம்பிவேலியினை கால்நடைத்துறை அமைச்சர் இராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணைப் பகுதியில், அமணலிங்கேஸ்வரா் கோவில் மற்றும் பஞ்சலிங்க அருவி உள்ளது. தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளாவிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அணைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையில் இறங்க தடை விதித்துள்ள போதும், அத்துமீறி குளிப்பதால் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.
மேலும், சில தனியார் அமைப்புகள் மற்றும் தொழிலதிபர்கள் இணைந்து மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு அணையை சுற்றி கம்பிவேலி அமைக்கக் கோரிக்கை விடுத்து, தங்களது பங்காக ரூ. 11,50,000-ஐ வழங்கினர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ. 23 லட்சம் வழங்கப்பட்டது. இந்தத் தொகையை பயன்படுத்தி கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் அணைப்பகுதிக்குள் செல்ல முடியாதவாறு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் பாதுகாப்பு வேலியினை கால்நடைத்துறை அமைச்சர் இராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, எஸ்.எம்., நாகராஜ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது, திருமூா்த்தி அணையில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யுமாறு பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.