கோவை : மதுக்கரை வனப்பகுதியில் யானை தாக்கியதில் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிவாரணமாக வழங்கப்பட்டது.

அய்யம்பதி பழங்குடிப் பகுதியில் உள்ள மோடம்பதி கிராமத்தைச் சேர்ந்த என். வெள்ளிங்கிரி (40), பி. அய்யப்பன் (50) ஆகியோர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வனப்பகுதிக்குள் விறகு வெட்டுவதற்காகச் சென்றுள்ளனர்.
அவர்கள் இன்னும் வீடு திரும்பாத நிலையில், எட்டிமடை கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இந்த நிலையில், அந்த வழியாக ரோந்து சென்ற வனத்துறையினர் அதனைப் பார்த்து, இருவரின் சடலங்களில் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், யானை தாக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், என். வெள்ளிங்கிரி, பி. அய்யப்பன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 இழப்பீட்டுத் தொகையை தலைமை வன பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்ஸவா வழங்கினார். அப்போது, உதவி வன பாதுகாவலர் சி. தினேஷ் மற்றும் மதுக்கரை வன அதிகாரி செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.