நீலகிரி : பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' தாக்குதல் சம்பவம் குறித்த விளக்க நிகழ்ச்சி குன்னூர் ராணுவ மையத்தில் நடைபெற்றது.
நீலகிரி : பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' தாக்குதல் சம்பவம் குறித்த விளக்க நிகழ்ச்சி குன்னூர் ராணுவ மையத்தில் நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானுக்கு சொந்தமான பகுதிக்குள் புகுந்து அந்நாட்டு ராணுவ முகாம்களை இந்திய ராணுவத்தினர் கடந்த ஆண்டு துவம்சம் செய்தனர். இந்தத் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பொருட்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு குன்னூரில் வெலிங்டன் ராணுவ மைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

மேலும், இஸ்சாஸ் ரைபிள், ஏகே 47, இஸ்சாஸ்லைட் மிஷன் கண், ராகட் லான்சர் 84 மி.மீ., மீடியம் மிஷின்கண், 5.2 கிலோ மீட்டர் தொலைவை தாண்டி தாக்கக் கூடிய செல்ஃப் மோட்டார் 8.1 மி.மீ., ரக பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் குறித்து ராணுவ வீரர்கள் எடுத்துக் கூறினர்.

முன்னதாக, மாணவ, மாணவியரை மகிழ்விக்கும் வகையில் ராணுவ பேண்ட் வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, ராணுவ வீரர்கள் தாங்கள் பயன்படுத்திய ராணுவ தளவாடங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினர். இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.