திருப்பூர் : திருமூா்த்தி அணைக்கு வரும் நீரில் அடித்து வரப்பட்ட கடமானின் உடலை அப்புறப்படுத்தாத அதிகாரிகளால், அந்த நீரைப் பருகும் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூா்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணைக்கு பரம்பிகுளம் அணையிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சுரங்க கால்வாய் மூலமாக காண்டூா் கால்வாய் வழியாக தண்ணீர் வருகிறது.
மலைப் பகுதிகளில் கால்வாய் வருவதால் தண்ணீர் குடிப்பதற்காகக் கால்வாயில் இறங்கும் வனவிலங்குகள் தண்ணீரில் அடித்து வரப்பட்டு இறந்து விடுகின்றன. அவற்றின் உடல் திருமூா்த்தி அணையில் கரை ஒதுங்குகின்றன. ஆனால், அவற்றை அப்புறப்படுத்த வேண்டிய பொதுப்பணிதுறை அதிகாரிகளோ இதனைக் கண்டு கொள்வதில்லை.

திருமூா்த்தி அணையின் மூலமாக 120 குடிநீா் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், காண்டூர் கால்வாயில் தண்ணீர் குடிப்பதற்காக இறங்கிய கடமான் ஒன்று தண்ணீரில் அடித்து வரப்பட்டு உயிரிழந்தது. இந்த மானின் சடலம் தற்போது திருமூர்த்தி அணையில் மிதந்து வருகிறது. இதனை அப்புறப்படுத்த வேண்டிய அதிகாரிகளோ, வழக்கம் போல கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.
இதனால், மானின் உடல் சிதைந்து தண்ணீர் சீர்கேடு அடைந்துள்ளது. மேலும், இந்தத் தண்ணீரைப் பருகும் மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, கடமானின் உடலை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, திருமூர்த்தி அணையின் வெள்ளத்திற்கு சிக்கி உயிரிழக்கும் விலங்குகளின் உடல்களை வனத்துறை அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சோ்ந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.