கோவை : ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக வானொலிகளைப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து திட்டம்) திட்டத்தை கோவையில் உள்ள பல்வேறு பகுதி மக்களுக்கு கொண்டு சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டது. இதையொட்டி, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முழுவதும் மக்களிடையே கொண்டு சேர்க்க முடியாத நிலையில், பிரதிநிதிகள் மூலமாகவும், ரத்தினவானியின் 90.8 சமூக வானொலியின் மூலமாகவும், நேரடி பிரச்சாரம் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளின் வாயிலாக ஒரு லட்சம் மக்களுக்கு அதாவது, 30 சதவீத மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.
இதனிடையே, ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக வானொலியைப் பயன்படுத்தலாம் என ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் யோசனை தெரிவித்தது.
மேலும், செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து திருவிழா மாதமாகவும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. அதில், விளம்பரம் மற்றும் காட்சி விளம்பரம் இயக்குநரகத்தின் மூலம் 50 சமூக வானொலிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த யோசனை தெரிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
நாளடைவில், மாநில அரசின் மூலம் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சமூக நலத்துறையின் சார்பில் பல்வேறு தலைப்புகளின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டத்தின் மாவட்ட திட்ட அதிகாரி ஜி. பத்மாவதி கூறியதாவது :- கோவை மாவட்டத்தில் உள்ள 18 பிளாக்குகளில் செயல்படும் 1,697 அங்கன்வாடிகளில் இருக்கும் 24 லட்சம் பயனாளிகளை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம். வளர்ச்சியின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை, எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகள் போன்றவற்றை மையமாகக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இது தொடர்பாக, இளம்பெண்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களிடம் ஆலோத்திருக்கிறோம்.

மேலும், சமூக வானொலியின் உறுப்பினர்களை அங்கன்வாடிகளுக்கு நேரடியாக அனுப்பி, சிறப்பு உரை, கல்வி வீடியோக்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் கையேடுகள் ஆகியவற்றை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
"ஆரோக்கியமான உணவு, ஊட்டச்சத்து அதிகரிப்பு, ரத்தசோகையில் இருந்து பாதுகாப்பது, மருத்துவ பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கான உணவுகள் ஆகியவற்றை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், உடல் ஆரோக்கியம் குறித்து பெரும்பாலான மக்கள் கூட்டங்கள், வானொலி பிரச்சாரம், யூடியூப் வீடியோக்கள் மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் அறிந்து கொள்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களை, ருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டத்தின் பயனாளிகளிடையே எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்த விழிப்புணர்வின் மூலம், சுய சுகாதாரம், சுத்தம், உணவு பராமரிப்பு மற்றும் குழந்தைகளின் நலனில் அக்கறை போன்றவை பெருகுகிறது," என்கிறார் ரத்தினவாணி சமூக வானொலியின் தலைவர் முகேஷ் மோகன்குமார் கூறினார்.
தற்போது, கிணத்துக்கடவு, ராமநாதபுரம், உக்கடம் மற்றும் பழங்குடியின பகுதியான சிறுவாணி உள்ளிட்ட பகுதிகளில் ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வை குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டப் பணிகள் நிறைவடைந்த பிறகு, சமூக வானொலிகள் மத்திய அரசின் மூலம் கவுரவிக்கப்பட உள்ளனர்.