கோவை : சரவணம்பட்டியில் உள்ள கனரா வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருட ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தப்பட்டது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு சைபர் கிரைம் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியில் கனரா வங்கி உள்ளது. அந்த வங்கியின் அருகிலேயே அந்த வங்கிக்கான ஏ.டி.எம். இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் அடையாளம் தெரியாத சிலர் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருட ஸ்கிம்மர் இயந்திரத்தினை பொருத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இன்று காலை வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க கனரா வங்கி ஏ.டி.எம். வந்த போது, ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டு சொருகும் பகுதி வித்தியாசமாக இருந்ததால் உடனடியாக கனரா வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், கனரா வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையத்திற்கு வந்து ஆய்வு செய்த போது, வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடுவதற்காக
ஸ்கிம்மர் இயந்திரத்தினை பொருத்தி சென்று இருப்பது தெரியவந்தது.
பின்னர், வங்கி அதிகாரிகள் உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்குப் புகார் அளித்தனர். இதனையடுத்து, ஸ்கிம்மர் இயந்திரத்தை பொருத்தியது யார் என்பது குறித்து ஏ.டி.எம். மையத்தில் பதிவாகியுள்ள சி.சி.டி.வி., காட்சிகளைக் கொண்டு சரவணம்பட்டி காவல் துறையினரும், சைபர்கிரைம் போலீசாரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்கிம்மர் இயந்திரத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணத்தை திருடிய கும்பலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தற்போது வாடிக்கையாளர்களின் தகவல்களை திருட மீண்டும் ஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தப்பட்டு இருப்பது வங்கி அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.