கோவை : ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழலைக் கண்டித்தும், அதன் மீது விசாரணை நடத்தக் கோரியும் கோவை மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை : ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழலைக் கண்டித்தும், அதன் மீது விசாரணை நடத்தக் கோரியும் கோவை மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பாரதிய ஜனதா அரசு பிரெஞ்சு அரசுடன் செய்துள்ள ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடும், ஊழலும் நடந்திருப்பதாக எதிர்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ரபேல் விமான ஒப்பந்தம் ஊழலைக் கண்டித்தும், அதன் மீது விசாரணை நடத்தக் கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோவையில் மாணவர் காங்கிரசார் சார்பில் தெற்கு தாலூகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கல்யாண் குமார் முன்னிலை வகித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி., மனோகரன் கலந்து கொண்டு பேசினார். இதில், மத்திய அரசின் தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு போன்ற மக்கள் விரோதக் கொள்கையை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டன.