கோவை : ஜீவன் சாந்தி புதிய திட்டத்தில் கோவையில் மட்டும் ரூ. 11 கோடி அளவிற்கு பாலிசிகள் இதுவரை பெறப்பட்டுள்ளதாக கோவை கோட்ட முதுநிலை மேலாளர் பசுலூல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கோவை : ஜீவன் சாந்தி புதிய திட்டத்தில் கோவையில் மட்டும் ரூ. 11 கோடி அளவிற்கு பாலிசிகள் இதுவரை பெறப்பட்டுள்ளதாக கோவை கோட்ட முதுநிலை மேலாளர் பசுலூல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி.,யில் கடந்த 12-ம் தேதி ஜீவன் சாந்தி என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முதல் பாலிசியை மும்பை தலைவர் வி.கே.,சர்மா பெற்று கொண்டார். இதைத் தொடர்ந்து, இதுவரை 143 பேர் ரூ. 11 கோடிக்கு இந்த பாலிசியை எடுத்துள்ளனர். இந்தத் தகவலை கோவை கோட்டத்தின் முதுநிலை கோட்ட மேலாளர் பசுலூல் ரஹ்மான் தெரிவித்தார்.

கோவை திருச்சி சாலையில் உள்ள அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- ஒற்றை தவணை திட்டம் “single premium” திட்டத்தின் கீழ் துவங்கிய உடனே அல்லது ஒத்திவைக்கப்பட்ட காலத்திற்கு பிறகு வாழ்நாள் முழுவதும் நிரந்தர வருமானம் பெறலாம். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தனி நபராகவோ அல்லது நெருங்கிய உறவினருடன் இணைந்தோ அல்லது மாற்று திறனாளிகளின் பயனுக்காகவோ இத்திட்டத்தில் சேரலாம். பாலிசி எடுத்த 3 மாதத்திற்கு பிறகு பாலிசியை சரண்டர் செய்து கொள்ளலாம். ஒரு ஆண்டிற்குப் பிறகு கடன் வசதியும் பெற்று கொள்ளலாம்.
ஒற்றை தவணை திட்டத்தில் ரூ. 10 லட்சம் செலுத்தும் பட்சத்தில், மாதம் ரூ. 5,283 பெற்று கொள்ள முடியும். வருடத்திற்கு ரூ. 66,200 பெறலாம். ரூ. 1.5 லட்சம் செலுத்தும் வாடிக்கையாளர்கள், மாதம் ரூ. 763 வீதம் வருடத்திற்கு ரூ. 9,156 வரை பெற முடியும், என்றார். இந்த சந்திப்பின் போது, கோட்ட வணிக மேலாளர் பன்னீர்செல்வம், மேலாளர் (விற்பனை) கிரிமாணிக்கவாசகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.