கோவை : கோவை மாநகராட்சியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் இணைந்து பில்லூர்-3 குடிநீர் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகான கோவையின் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு ரூ. 1,011 கோடி மதிப்பீட்டில் பில்லூர்-3 குடிநீர் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டது.
பில்லூர் திட்டத்திற்காக குடிநீர் குழாய் பதிக்கவும், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கும், டணல் அமைப்பதற்கும் 9 கிராமங்களில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் கோவை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பில்லூர்-3 குடிநீர் திட்டத்திற்காக தேவைப்படும் நிலத்தில் 52 ஏக்கர் அரசு நிலமாக உள்ளது. மேலும், 122 ஏக்கர் நிலத்தை கையப்படுத்த 9 கிராமங்களில் சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. நிலத்தை கையகப்படுத்தவதற்காக நில உரிமையாளர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதங்கள் பெறப்பட்டுள்ளன. நிலத்திற்கான இழப்பீட்டுத்தொகை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு, திட்டப்பணிகள் தொடங்கும்," என்றனர்.