திருப்பூர் : பெரியார் சிலை சுற்றுச்சுவரில் எச்.ராஜா பிறந்தநாள் சுவரொட்டி ஒட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியார் மற்றும் அண்ணாவின் சந்திப்பு நிகழ்வு திருப்பூரில் நடைபெற்றதை நினைவு கூறும் வகையில், திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக பெரியார், அண்ணா சிலைகள் வைக்கப்பட்டு சிறிய சுற்றுச்சுவர் எழுப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்தச் சுற்றுச்சுவரின் பின்புறம் பா.ஜ.க.,வின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பிறந்தநாளை ஒட்டி, 18 வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தோர் அங்கு திரண்டனர். இதனால், திருப்பூர் வடக்கு போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

பின்னர், திருப்பூர் பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுவரொட்டியை உடனடியாக அகற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து, போலீஸார் அதனை அகற்றுவதாக தெரிவித்தனர். ஆனால், கூட்டமைப்பினர், சம்பந்தப்பட்ட நபர்களே அகற்ற வேண்டும், இல்லையேல் சுவரொட்டி மீது தார்பூசி அழிப்போம் என முழக்கமிட்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, போலீஸார் மேற்பார்வையில் சுவரொட்டி அப்புறப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பினர் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் பெரியார் சிலை சேதப்படுத்தப்படுவதும், அவமதிப்பு செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நிலையில், திட்டமிட்டு பெரியார் சிலை வளாகத்தின் சுற்றுச்சுவரின் பின்புறம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பது உள்நோக்கத்துடன் செய்துள்ள செயலாகும். எச். ராஜா படம் மட்டும் பிரசுரிக்கப்பட்டு சுவரொட்டியில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் வாழ்த்துகிறார்கள் என்ற பெயர் கூட இல்லை. சுவரொட்டியில் கண்டிப்பாக இடம்பெற வேண்டிய அச்சிடப்பட்ட இடமும் இல்லை. ஆகவே, இதனை உள்நோக்கத்துடன் தயாரித்து ஒட்டி உள்ளனர். வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
திருப்பூர் வடக்கு போலீஸார் கூறியதாவது:- பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பினர் அளித்த புகாரின் பேரில், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் சட்டத்தின் கீழ் அடையாளம் தெரியாத பா.ஜ.க.,வினர் மீது வழக்கு பதிந்துள்ளோம், என்றனர்.
இந்தப் புகார் குறித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., தலைவர் சின்னச்சாமி கூறுகையில், "யாரோ உள்நோக்கத்துடன் ஒட்டியுள்ளனர். எங்கள் கட்சியில் யாரும் அப்படி செய்யவில்லை. நாங்கள் விசாரித்துவிட்டோம். வழக்கு பதிந்திருந்தால், அதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம்," என்றார்.