கோவை : மாவோயிஸ்ட் அமைப்பு தொடங்கப்பட்டதை நினைவு கூறும் விதமாக, கோவை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக - கேரள எல்லையோரங்களில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருந்து வரும் சூழலில், அவ்வப்போது போஸ்டர்கள் மூலம் தங்களது கருத்துகளையும் வெளிபடுத்தி வருகின்றனர். அண்மையில் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பினர் ஆயுதம் ஏந்தி போராடுவோம், கொரில்லா படையில் அணி திரள்வோம் என மலையாள மொழியில் எழுதப்பட்ட நோட்டீஸ்களை ஓட்டி சென்றனர்.

இந்த நிலையில், கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் அதே வாசகங்கள் தமிழில் மொழிபெயர்த்து சிவப்பு நிறத்தில் கைகளால் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. அதில், நிலம், நீர், காடு உழைக்கும் மக்களுக்கே சொந்தம், ஏகாதிபத்திய - நிலவுடமை சுரண்டாட்சியை எதிர்த்து ஆயுதம் ஏந்துவோம், மக்கள் விடுதலைக்காக மக்கள் அதிகாரத்திற்காக மக்கள் ஜனநாயகத்திற்காக மக்கள் யுத்தத்தை தொடுப்போம். இதில், மக்கள் விடுதலை கொரில்லா படையில் அணிதிரள்வோம் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், கோவை நகரில் மாவோயிஸ்ட்கள் தங்களது அமைப்பில் சேருமாறு அழைப்பு விடுத்து நோட்டீஸ் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இது தொடர்பாக கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்ட் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒட்டினார்களா..? அல்லது அவ்வமைப்பின் ஆதரவாளர்கள் ஒட்டினார்களா..? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.