மீண்டும் பொலிவுபெறும் குதிரை வண்டி நீதிமன்ற வளாகம் : சமூகவிரோதிகளிடம் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

கோவை : பல ஆண்டுகளாக சமூக விரோதிகளின் கூடாரமாக பாழடைந்து கிடந்த குதிரை வண்டி நீதிமன்ற வளாகம், மாவட்ட நீதித்துறையால் உத்தரவால் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை : பல ஆண்டுகளாக சமூக விரோதிகளின் கூடாரமாக பாழடைந்து கிடந்த குதிரை வண்டி நீதிமன்ற வளாகம், மாவட்ட நீதித்துறையால் உத்தரவால் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சமூக விரோதிகளின் கூடாரம் :

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறமும், அவினாசி சாலை மேம்பாலத்தின் அருகிலேயும் உள்ள குதிரை வண்டி நீதிமன்றமானது, பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிறப்புக்குரிய நீதிமன்றமாக கோவை மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் லட்சக்கணக்கான வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்னர், இந்த நீதிமன்றம் பந்தய சாலைக்கு உட்பட்ட பகுதிக்கு மாற்றிய பின், குதிரை வண்டி நீதிமன்ற கட்டிடம் அப்படியே பராமரிப்பின்றி ஒதுக்கப்பட்டது.

இதனால், இந்தக் கட்டிடம் பாழடைந்தது. மேலும், சமூக விரோதிகளுக்கு சவுகரியமாக மாறியது. கேட்பாரற்று கிடக்கும் இந்தக் கட்டிடத்திற்குள் இரவு நேரங்களிலும், மதியம் ஆள்நடமாட்டம் இல்லாத நேரங்களிலும் சமூகவிரோதிகள் பல சட்டவிரோத செயல்களை செய்து வந்துள்ளனர். இதனால், இந்த இடத்தில் பல்வேறு புகார்கள் எழுந்தன. அதேபோல, பல்வேறு ஊடகத்திலும், பொதுமக்கள் சார்பிலும், வழக்கறிஞர்கள் சார்பிலும் இந்தப் பழமையான நீதிமன்றத்தை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்தது.



இப்படி பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று 18 ஆண்டுகளாகப் பாழடைந்து கிடந்த குதிரை வண்டி நீதிமன்ற வளாகத்தை சீரமைக்க தற்போது மாவட்ட நீதித்துறை உத்தரவிட்டுள்ளது. 

பட்டியலும், எண்ணிக்கையும் :

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கிட்டத்தட்ட 37 நீதிமன்றங்கள் உள்ளன. இதில், ஒருசில நீதிமன்றங்கள் வேறு இடங்களில் தனியாகவும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, இன்னும் சிறப்பு நீதிமன்றங்களும் வரவுள்ளது. 



இவற்றில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (8), காசோலை சிறப்பு நீதிமன்றம் (2), தலைமை குற்றவியல் நீதிமன்றம் (1), குடும்ப நல நீதிமன்றம் (2), மகளிர் நீதிமன்றம் (2), முதன்மை மாவட்ட நீதிமன்றம் (1), கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (4), சி.பி.ஐ., நீதிமன்றம் (1), அத்தியாவசிய பண்டங்கள் நீதிமன்றம் (1), தொழிலாளர் நீதிமன்றம் (2), ஊழல் தடுப்பு நீதிமன்றம் (1), முன்சீப் நீதிமன்றம் (6), துணை நீதிமன்றம் (4), டான்பிட் (1), மோட்டார் வாகன இழப்பீடு நீதிமன்றம் (1) ஆகியவை உள்ளன.

அதேபோல, நீதிமன்றத்தை அடுத்த வெளிப்பகுதிகளில் நுகர்வோர் நீதிமன்றம் (1), வெடிகுண்டு வழக்கு நீதிமன்றம் (1), கடன் வசூல் தீர்ப்பாயம் (1) போன்ற நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இடநெரிசல், கோரிக்கை :

சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தினமும் 2.000-க்கும் மேற்பட்ட வழக்காடிகளும், 2,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் வந்து செல்கின்றனர். இப்படி குறைந்த இடவசதி கொண்ட இடத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து தங்கள் வழக்குகளை எதிர்நோக்கி வருவதால் இட நெருக்கடி என்பது அதிகமாக உள்ளது.

குறிப்பாக, நீதிமன்ற வளாகத்திற்குள் கார், பைக் போன்ற வாகனங்கள் அதிகமாக வருவதாலும் நெரிசல்கள் ஏற்படுகின்றன. இந்த நெரிசலை சரி செய்ய வழக்கறிஞர்களும் பல்வேறு திட்டங்களைச் செய்து வருகின்றனர். இருப்பினும், நீதிமன்றத்திற்கு வரும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் நீதிமன்ற வளாகத்தில் நெரிசல்கள் குறைந்தபாடில்லை. ஆகவே, கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இட நெருக்கடிகளை குறைப்பதற்காக கோவை வழக்கறிஞர் சங்கத்தினர் குதிரை வண்டி நீதிமன்றத்தில் உள்ள இடத்தில் சிறப்பு நீதிமன்றங்களை மாற்றியமைக்கக் கோரி தீர்மானங்களை நிறைவேற்றி நீதிமன்ற நிர்வாகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.



புதுப்பொலிவடையும் குதிரை வண்டி நீதிமன்றம் :

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களை, வேறு இடத்துக்கு மாற்ற பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதன்படி, குதிரை வண்டி நீதிமன்றத்திற்குள், புதிய நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு, சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் பின்னோக்கிக் கொண்டே சென்றது.

இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு, குதிரை வண்டி நீதிமன்ற வளாகத்தை சீரமைக்க மாவட்ட நீதித்துறை நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது. பாழடைந்து கிடந்த வளாகம் சுத்தம் செய்யப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயார் நிலையில் உள்ளது. அதேபோல, வெளி நபர்கள் மற்றும் வாகனங்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க, புதிதாக இரும்பு கேட் போடப்பட்டுள்ளது. இந்த வளாகத்திற்குள் அத்துமீறி உள்நுழைபவர்கள் மீது, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நீதித்துறை மாவட்ட நிர்வாகம் சார்பில் குதிரை வண்டி நீதிமன்ற வளாகத்தின் வெளிப்புறத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 



நடவடிக்கைக்கு வரவேற்பு : 

இதுகுறித்து குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் கலையரசன் கூறும்போது :- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆன கோவை மாவட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல, பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்த கோவை மாவட்டத்தில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தினமும் கிட்டத்தட்ட 4,000-க்கும் மேற்பட்டோர் வருவதால் அடிக்கடி நீதிமன்ற வளாகத்திற்குள் இட நெரிசல்களும், இடையூறுகளும் ஏற்படுகிறது.

அதேபோல, சிறப்பு நீதிமன்றங்களும் கடந்த சில வருடங்களாகவே புதிது புதிதாக உருவாகிக் கொண்டே வருகின்றது. இதனால், இந்த இட நெரிசலை சரி செய்ய வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். குறிப்பாக, குதிரை வண்டி நீதிமன்றம் உள்ள இடத்தில் சிறப்பு நீதிமன்றங்களை மாற்றி அமைத்து தரவும் கோரிக்கை வைத்திருந்தனர். இப்படி இருக்க தற்போது இந்தக் கோரிக்கைகள் நீதிமன்றம் நிர்வாகத்தில் பரிசீலிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது வரவேற்கத்தக்கது, என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...