நீலகிரி : சாதி, ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் அவசியம் என உதகையில் ஆணவக் கொலையாளிகளுக்கு எதிரான போராளி கவுசல்யா தெரிவித்துள்ளார்.

உதகையில் உள்ள சுதந்திர திடலில் இந்துஸ்தான் யூனிலிவர் நிர்வாகம், பாண்ட்ஸ் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திய விரோதப்போக்கினை கண்டித்து முன்னாள் பாண்ட்ஸ் எம்ப்ளாயிஸ் நலசங்கம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில், இந்துஸ்தான் யூனிலிவர் நிர்வாகம் தொழிலாளர் விரோதப் போக்கை கைவிட வேண்டும். பாண்ட்ஸ் இந்திய லிமிடெட் கம்பெனிக்கு நுழைந்ததால் தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த அத்தனை சலுகைகளையும் முடக்கி விட்டனர். தொழிலாளர்கள் சட்டத்துக்கு புறம்பாக வி.ஆர்.எஸ்., என்ற திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச தொகையை வழங்கி அனுப்பி வருவது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக சாதி, ஆணவக் கொலையில் கணவனை இழந்த கவுசல்யா பேசினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சாதி, ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் ஏற்றினால் மட்டுமே இந்தியாவில் சாதி, ஆணவக் கொலைகளை தடுக்க முடியும்," என்றார்.