கோவை : பூமார்க்கெட் பகுதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள், மாநகராட்சி அதிகாரிகளின் முன்னிலையில் இன்று இடித்து அகற்றப்பட்டது.

பூமார்க்கெட் சிவன் கோயில் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள ஏழு கடைகள் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. வணிக வளாக கட்டிடத்தின் முன்பகுதி காலியாக இருந்தது. கடந்த ஒரு வருடமாக இந்த காலியிடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டன. மண்பானைகள், மண்பாண்டப் பொருட்கள், பூமாலைகள் போன்றவை இங்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், மத்திய மண்டல உதவி ஆணையர் மற்றும் உதவி வருவாய் அலுவலர் தலைமையிலான மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் இன்று நேரில் சென்று வணிகவளாகத்தை ஆய்வு செய்ததோடு, ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கடைகளை முழுமையாக அகற்றினர்.