திருப்பூர் பனியன் நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளிக்கு 20 நாட்களுக்கு முன்னதாக போனஸ் வழங்கக் கோரிக்கை

திருப்பூர் : திருப்பூர் பனியன் கம்பெனிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு 20 நாட்களுக்கு முன்பாகவே போனஸ் தொகையை சதவிகித அடிப்படையில் கணக்கிட்டு வழங்குமாறு பனியன் நிறுவனங்களுக்கு பனியன், பொதுத் தொழிலாளர் சி.ஐ.டி.யு., சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூர் : திருப்பூர் பனியன் கம்பெனிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு 20 நாட்களுக்கு முன்பாகவே போனஸ் தொகையை சதவிகித அடிப்படையில் கணக்கிட்டு வழங்குமாறு பனியன் நிறுவனங்களுக்கு பனியன், பொதுத் தொழிலாளர் சி.ஐ.டி.யு., சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் நேற்று மாலை பனியன், பொதுத் தொழிலாளர் சி.ஐ.டி.யு., சங்க நிர்வாகக்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் சி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யு., மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன், மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் அ.ஈஸ்வரமூர்த்தி உள்பட நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், திருப்பூர் பனியன் தொழிலாளர்களின் போனஸ் கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இதையடுத்து, கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு:- பனியன் தொழில் சீரான வளர்ச்சியின் மூலம் ரூ. ஒரு லட்சம் கோடி என்ற இலக்கை நோக்கி ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுப் பிரிவு உற்பத்தி நடைபெற்று வருகிறது. தொழிலாளர்களின் இரவு பகல் பாராத கடின உழைப்பின் மூலம் இந்த வளர்ச்சி சாத்தியமாகி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளின் விளைவாக பெட்ரோல், டீசல் உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. 

கல்வி, சுகாதாரம், வீட்டு வாடகை போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாத அளவுக்கு பனியன் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. எனவே, இன்றைய தேவையை ஓரளவாவது நிறைவேற்றும் முறையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் தொகையை தீபாவளி பண்டிகைக்கு 20 நாட்களுக்கு முன்பாக வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு., வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மேலும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் குறிப்பாணையில் சுட்டிக்காட்டியுள்ளதைப் போல் இத்தொழிலில் பீஸ் ரேட் மற்றும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கும் போனஸ் சட்டப்படி சதவிகித அடிப்படையில் கணக்கிட்டு போனஸ் வழங்க வேண்டும். அந்தந்த தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே போனஸ் வழங்க வேண்டும். இது குறித்து தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து நியாயமான போனஸ் பெற பேசித் தீர்வு காணவும், தேவை ஏற்பட்டால் சி.ஐ.டி.யு., சங்கத்தைத் தொடர்பு கொள்ளும்படியும் கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது, இதுபோன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...