நீலகிரி : உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு குன்னூரில் உள்ள பாஸ்டியர் ஆய்வகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியினை பாஸ்டியர் ஆய்வக நிர்வாக இயக்குநர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். இதில், பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள், தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனம் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ரேபிஸ் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் வெறிநாய்க்கடி ஏற்படும் போது, அதிலிருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது, இந்த நோயின் தீவிரத்தன்மை .இது வராமல் பாதுகாப்பது தொடர்பான பல்வேறு விதமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தொடங்கிய இந்த ஊர்வலம் பேருந்து நிலையம் வரை சென்று முடிந்தது. இறுதியில், ரேபிஸ் நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்க உரை நிகழ்த்தப்பட்டது.