கோவை : தென்மேற்கு பருவமழை நிறைவடையும் நிலையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது. இதனிடையே, பகல்நேர வெப்ப நிலையானது 32 டிகிரி செல்சியஸ்யாகவும், இரவு நேர வெப்ப நிலை 22.5 முதல் 24.5 டிகிரி செல்சியாகவும் நிலவ வாய்ப்புள்ளது. கோவையைப் பொறுத்தவரையில், 10 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் வீச வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவ மழையானது 209 மி.மீ மழை எதிர்பார்த்த நிலையில் தற்போது 278 மி.மீ., மழை கிடைத்துள்ளது.
வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். கோவையில் 363 மி.மீ மழை எதிர்பார்க்கப்படுகிறது. சராசரி அளவு 328 மி.மீ. எதிர்பார்க்கப்படுகிறது. கோவையைப் பொறுத்தவரையில் இது சற்று கூடுதல் தான். இந்த மழையின் அளவு 17 முதல் 18 வரையிலான மழை பொழிவில் கிடைக்கும்.
மழை நீரை சேமிக்க விவசாயிகள் நிலங்களை உழுதுண்டு வைக்க வேண்டும். மரங்களில் வேர் பகுதிகளில் சுற்றி பாத்தி கட்ட வேண்டும். இதன்மூலம், 320 லிட்டர் நீர் மரங்களுக்கு கிடைக்கும். நீர் நிலைகளில் வரும் மழை நீரினை சேமித்து வைக்க முன் ஏற்பாடுகளை செய்து கொள்ள தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியிடம் மழை நீர் வடிந்து செல்லும் வகையில் வடிகால் பகுதிகளை சுத்தம் செய்து கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வருடத்தில் பெய்கின்ற மழையில் 45 முதல் 48 சதவீதம் மழையானது வடகிழக்கு பருவமழையில் தான் கிடைக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த வருடம் வடகிழக்கு பருவமழை நன்றாக உள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 924 மி.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறைந்தபட்சமாக திருப்பூரில் 281 மி.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது, என்றார்.