கோவை: கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் விடுதி காப்பாளர் புனிதாவுக்கு ஜாமீன் தர மறுத்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் மூன்றாவது முறையாக மனுவை நிராகரித்தது.

பீளமேடு பகுதியில் தர்ஷனா என்ற பெண்கள் விடுதி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த விடுதியில் தங்கியிருக்கும் சில மாணவிகளை விடுதியின் உரிமையாளர் ஜெகநாதனுடன் உல்லாசமாக இருப்பதற்கு வார்டன் புனிதா அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவிகள் விடுதியை விட்டு வெளியேறினர். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விடுதி காப்பாளர் புனிதா மற்றும் உரிமையாளர் ஜெகநாதன் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, விடுதி உரிமையாளர் ஜெகநாதன் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். புனிதாவை தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்த நிலையில், விடுதி வார்டன் புனிதா கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, புனிதாவுக்கு ஜாமீன் கேட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு முறை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை நீதிமன்றம் நிராகரித்தது.
தொடர்ந்து இன்றும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அதனை நிராகரித்து உத்தரவிட்டார்.