தவறான தகவல்களைக் கொண்டு வெளிநாட்டில் இருக்கும் மகன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு : உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

கோவை : இந்து பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புப்படுத்தி வெளிநாட்டில் இருக்கும் தனது மகனை இண்டர்போல் உதவியுடன் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருப்பதைக் கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஷாஜகான் என்பவர் மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் சாய்பாபா காலனி கே.கே.,புதூரை சேர்ந்தவர் ஷாஜகான். இவர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது மகன் முகம்மது ரபிக்குல் ஹசன், மர அறுவை தொழில் செய்து வந்தார். தொழில் இலாபம் இல்லாத காரணத்தால் ஓமன் நாட்டிற்கு சென்று வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில், இந்து பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக எனது மகன் மீது சி.பி.சி.ஐ.டி., விசாரணை மேற்கொண்டது. அதில், இவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறி சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை நிறுத்தி கொண்டனர். 

இந்த நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி ஓமனில் உள்ள தனது மகனின் வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தனது மகனை விசாரணைக்கு அழைக்காமலேயே ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலம், இண்டர்போல் போலீஸ் உதவியுடன் ஓமனில் இருக்கும் தனது மகனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எனவே, தவறான தகவல்களைக் கொண்டு தனது மகனை கைது செய்ய என்.ஐ.ஏ., மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...