'மூன்று சக்கர வாகனம் ஒட்டி தான் மூனு வேளை சாப்பிடுறோம், இப்போ அதுக்கும் பிரச்சினை வந்துடிச்சு' : பெட்ரோல் விலை உயர்வால் ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்

கோவை : பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பல தரப்பினர் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஆட்டோ தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலை விட்டு செல்லும் நிலைமையில் உள்ளதாகவும் கோவையில் ஆட்டோ ஒட்டுநனர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவை : பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பல தரப்பினர் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஆட்டோ தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலை விட்டு செல்லும் நிலைமையில் உள்ளதாகவும் கோவையில் ஆட்டோ ஒட்டுநனர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவை மாநகரில் மட்டும் 12 தொழிற்சங்கத்தைச் சார்ந்த 13,000 ஆட்டோக்கள் இயங்குகின்றன. அதுபோக, சரக்கு போக்குவரத்திற்காக மட்டும் 5,000 ஆட்டோக்கள் இயங்குகின்றன. காந்திபுரம், ரயில்நிலையம், உக்கடம், டவுன்ஹால், அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், சிவானந்தா காலனி, செல்வபுரம், பேரூர், சுங்கம், ராமநாதபுரம், சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான மக்கள் போக்குவரத்து நெரிசலில் இருந்து விரைந்து செல்ல ஆட்டோக்களையே பயன்படுத்துகின்றனர்.

இதனிடையே, பெட்ரோல், டீசல் விலையானது கடந்த ஆறு மாத காலமாக ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்டாலும், தற்போது உச்சத்தில் உள்ளது. இன்றைய நிலவரப்படி (செப்டம்பர் 28) பெட்ரோல் விலை சென்னையில் ரூ. 86.51 ஆகவும், டீசல் ரூ. 78.69 ஆகவும் விற்பனையாகி வருகிறது. 

இதனால், ஆட்டோ வாடகையானது உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோவையில் பெரும்பாலான ஆட்டோக்கள் மீட்டர் கட்டணத்தில் இயக்கவில்லை என்றாலும், வாடகையானது தற்போதைய பெட்ரோல், டீசல் விலைக்கு கட்டுபடியாகவில்லை. மீட்டர் கட்டணத்தில் குறைந்தபட்சம் ரூ. 25-ஐ ஆட்டோக்கள் வசூலித்து வரும் நிலையில், குறைந்தபட்சம் 50 ரூபாயை வாங்கும் ஆட்டோக்களும் உள்ளன. ஆனால், தற்போது ரூ. 50 வாங்கினாலும் கூட கட்டுபடியாகாது என ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



இதனிடையே, தொழிற்சங்க ரீதியாக பலகட்ட போராட்டங்களை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நடத்தினாலும் கூட, மத்திய, மாநில அரசுகள் அதற்கு செவிசாய்த்தபாடில்லை என தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் மாநில துணைத்தலைவர் மற்றும் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமாரன் நம்மிடம் கூறுகையில், "இந்த விலை உயர்வால் முதலில் அவதியடைவது மக்கள் தான். பெட்ரோல் விலை உயர்வால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். 

இதனால், ஆட்டோக்களின் வாடகை பல மடங்கு உயரும். மக்கள் அத்தியாவசிய இடங்களுக்குச் செல்ல ஆட்டோக்களை கண்டிப்பாக உபயோகிக்கும் சூழ்நிலை தான் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிரந்தரமாக்கப்பட்டால் தான் ஆட்டோ வாடகைகள் மீட்டர் கட்டணம் கொண்டு நிரந்தரமாக இயக்கமுடியும்.

தற்போது, கால்டாக்சி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் ஆட்டோ தொழிலே நாசமாகிவிட்டன. பலர் ஆட்டோ ஒட்டுவதையே விட்டு விட்டனர். இன்னும் பலர் வேறு தொழிலுக்கு போகமுடியாமல் தவித்து வருகின்றனர். அடுத்தகட்ட போராட்டம் குறித்து பேசி வருகிறோம்," என்றார்.

கோவையில் உள்ள மத்திய ரயில்நிலையத்தில் நாள்தோறும் சேலம், சென்னை, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும், கேரளா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

ரயில்களின் மூலம் கோவை வரும் பல லட்சம் பயணிகள், ஆட்டோக்களின் மூலமாகவே நகரின் பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றனர். எனவே, ரயில்நிலையத்தில் அமைந்துள்ள ஸ்டேண்டில் மட்டும் 118 ஆட்டோக்கள் உள்ளன.

இது குறித்து ஆட்டோ ஒட்டுநர் ரங்கநாதன் என்பவர் கூறுகையில், "ஏற்கனவே இன்சூரன்ஸ் விலை அதிகம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டு வரும் எங்களுக்கு இது தற்போது மிக முக்கியமான வாழ்வாதார பிரச்சினையாக மாறியுள்ளது. 

இது தொடர்ந்தால் ஆட்டோ ஒட்டுநர்கள் வேலையின்றி அவர்களது குடும்பம் வறுமையில் வாடும் சூழ்நிலை ஏற்படும்," என்றார்.

மக்களின் சிறுதூர பயணங்களுக்குப் பெரிதும் பயன்படக் கூடியவை ஆட்டோக்களே. அதனை நம்பி வாழ்க்கையை ஓட்டுபவர்கள் ஆட்டோ ஒட்டுநர்களும், தொழிலாளர்களுமாவர். இவர்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு முன் வர வேண்டும் என சமூக ஆர்வலர் அருள்ராஜ் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...