கனமழையால் நீலகிரி மலை ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை மூன்று மணி நேரம் பாதிப்பு

கோவை: நேற்றிரவு மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மலை ரயில் போக்குவரத்து சுமார் மூன்று பாதிக்கப்பட்டது.

கோவை:  நேற்றிரவு மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மலை ரயில் போக்குவரத்து சுமார் மூன்று பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்க உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.



இந்நிலையில், இன்று காலை 7.10 மணிக்கு வழக்கம் போல் சுற்றுலாப் பயணிகளோடு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நீலகிரி மலை ரயில் புறப்பட்டு கல்லார் ரயில்நிலையத்தை அடைந்த போது அதன் தண்டவாளப் பாதையில் மூன்று இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

இப்பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக மலை மீது இருந்து சிறு சிறு பாறைகளோடு மண் சரிவு ஏற்பட்ட காரணத்தினால் இருப்புப் பாதைகளை மண் மூடியது. இதனால், மலை ரயில் கல்லார் ரயில்நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. 



தொடர்ந்து, இருபதிற்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கல்லார் மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கிடையே ஏற்பட்டிருந்த மண் சரிவுகளை அகற்றி சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பின்னர் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மூன்று மணிநேரம் தாமதமாக மீண்டும் கல்லார் ரயில்நிலையத்தில் மலை ரயில் இருந்து புறப்பட்டு சென்றது.

மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நடுவழியில் மலை ரயில் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றதால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...