டெல்லி: கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
டெல்லி: கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களையும் அனுமதிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி உள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
தீர்ப்பில், சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர். நீதிபதி இந்து மல்ஹோத்ரா தனி தீர்ப்பு வழங்குவார்.