கோவையில் மது போதையில் தகராறில் ஈடுபட்டவர்களை எச்சரித்த காவலருக்கு கத்திக்குத்து

கோவை: அன்னூர் காவல் நிலைய காவலராக பணியாற்றும் வெங்கடேஷ் என்பவரை கத்தியால் குத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை: அன்னூர் காவல் நிலைய காவலராக பணியாற்றும் வெங்கடேஷ் என்பவரை கத்தியால் குத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அன்னூர் காவல் நிலைய காவலராக பணியாற்றி வருபவர் வெங்கடேஷ்(34). இவர் நேற்று பெரியநாயக்கன்பாளையம் சாந்திமேடு அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்டவர்களை எச்சரித்து களைந்து போக அறிவுறுத்தியுள்ளார். 



அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்கள் தனியாக சென்ற காவலர் வெங்கடேசை மறித்து கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை மேற்கொண்டதில் உயிருக்கு ஆபத்து இல்லை என தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சைக்கு பின்னர் வெங்கடேஷ் வீடு திரும்பிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பெரியநாயக்கன்பாளையம் போலீசார் காவலர் வெங்கடேசை தாக்கிய நபர்களை தேடி வருகின்றனர். பொதுமக்களை பாதுகாக்க கூடிய காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...