நீலகிரி: அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள காலாட்படை தினத்தை முன்னிட்டு குன்னூரில் மெட்ராஸ் ராணுவ மையம் சார்பில் 10 ராணுவ வீரர்கள் இன்று காலை சைக்கிள் மூலம் டெல்லி புறப்பட்டனர்.
நீலகிரி: அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள காலாட்படை தினத்தை முன்னிட்டு குன்னூரில் மெட்ராஸ் ராணுவ மையம் சார்பில் 10 ராணுவ வீரர்கள் இன்று காலை சைக்கிள் மூலம் டெல்லி புறப்பட்டனர்.

மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் சார்பில் ஆண்டுதோறும் காலாட்படை தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள காலாட்படை தினத்தை சிறப்பிக்கும் வகையில் குன்னூர் தங்கராஜ் ஸ்டேடியத்தில் இருந்து பத்து சைக்கிள்களில் ராணுவ வீரர்கள் இன்று புறப்பட்டனர்.

ராணுவ வீரர் சுபம் சிங் தலைமையில் சுமார் 2,781 கிலோ மீட்டர் தூரம், மைசூர், பெங்களூரு வழியாக 30 நாட்கள் பயணித்து டில்லி ராணுவ மையத்தை அடைய உள்ளனர்.
இவர்கள் செல்லும் வழியில் தூய்மை இந்தியா, பெண்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி செல்கின்றனர். இந்த சைக்கிள் பேரணியை குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தலைவர் பிரிகேடியர் சாங்வான் துவக்கி வைத்தார்.