ஆக்கிரமிப்பு கடைகளை மட்டும் அகற்றிவிட்டு நகராட்சி கட்டிடத்தை அகற்றாததால் நீலகிரியில் வியாபாரிகள் போராட்டம்

நீலகிரி: குன்னுாரை அடுத்த காட்டேரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றி விட்டு, அங்கிருந்த நகராட்சி கட்டிடத்தை அகற்றாததால் பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி வியாபாரிகள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி: குன்னுாரை அடுத்த காட்டேரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றி விட்டு, அங்கிருந்த நகராட்சி கட்டிடத்தை அகற்றாததால் பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி வியாபாரிகள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி சந்திப்பிலிருந்து மஞ்சூர், கொலக் கொம்பை, ஆர்செடின் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது.

காட்டேரி சந்திப்பிலிருந்து செல்லும் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து 22 கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த இடத்தை காலி செய்து தர வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு நெடுஞ்சாலை துறை மூலம் பல முறை நோட்டிஸ் கொடுக்கப்பட்டது.

இருப்பினும் கடைகள் காலி செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மாலை நேரம் மாநில நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் பாரிஜாதம் தலைமையில் ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றச் சென்றனர். அவர்கள் பாதுகாப்பிற்காக குன்னூர் நகர போலீசார் குவிக்கப்பட்டனர்.

உரிமையாளர்கள் தங்கள் உ‌டமைகளை எடுத்துச்சென்றவுடன் பொக்லைன் எந்திரம் மூலம் கடைகள் இடித்து தள்ளப்பட்டன. இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கடைகளின் மத்தியில் நகராட்சி கட்டிடத்தில் ரேஷன் கடை இருந்தது. நகராட்சி கட்டடம் என்பதால் கட்டிடத்தை இடிக்கப்போவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நகராட்சிக்கு தகவல் கொடுத்தனர்.

இருப்பினும் அங்கு நகராட்சி அதிகாரிகளோ அல்லது அலுவலர்களோ வரவில்லை. இதனைத்தொடர்ந்து, முறையாக நகராட்சிக்கு தகவல் தெரிவித்து கட்டிடத்தை இடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் ‌முடிவு செய்தனர்.

ஆனால் இந்த முடிவிற்கு கடைக்காரர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்று வியாபாரிகள், திடீரென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து, நகராட்சி கட்டிடம் இப்போதே இடிக்கப்படும் என்று கூறி பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து நகராட்சி கட்டிடத்தை இடித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் அமைதியானார்கள். 

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...