திருப்பூர் : 3 நாட்கள் நடக்கும் 7-வது சர்வதேச யார்னெக்ஸ் நூல் கண்காட்சி திருப்பூரில் தொடங்கியது.

ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச யார்னெக்ஸ் கண்காட்சி இந்தியாவில் 7-வது முறையாக நடைபெறுகிறது. திருப்பூர் பழங்கரை இந்திய பின்னலாடை கண்காட்சி அரங்கில் 3 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை தென்னிந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக தலைவர் சக்திவேல் தொடங்கி வைத்தார். 139 அரங்குகளில் இந்தியாவின் மும்பை, சூரத், டெல்லி, நொய்டா, லூதியான, சண்டிகர் பகுதிகளில் இருந்து பல்வேறு முன்னனி நிறுவனங்களும், அமெரிக்கா, தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும், பருத்தி, கம்பளி, பட்டு, பிளாக்ஸ் போன்ற இயற்கை ரகங்கள், சிந்தடிக், எலாஸ்டிக், டெனிம் போன்ற புதிய செயற்கை ரகங்கள் என பலவிதமான நூல்கள் மற்றும் துணி வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து ஏற்றுமதி சரிவை சந்தித்து வந்த நிலையில், தற்போது டாலர் மதிப்பு உயர்வால் ஏற்றுமதியாளர்கள் புதிய ஆர்டர்களை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு இந்த கண்காட்சியின் வாயிலாக புதிய தொழில்நுட்பங்கள் அறியப்படுவதுடன், அதன்வாயிலாக புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் பெறவும் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோல, உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியும் தற்போது அதிகரித்து வருவதால் புதிய ரகங்கள் தேவை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவின் பின்னலாடை உற்பத்தியில் 85 விழுக்காடு உற்பத்தியை தனித்து வழங்கும் திருப்பூருக்கு இந்த கண்காட்சியானது, மேலும் பல தொழில்நுட்பங்களை வழங்குவதுடன் சிறந்த தொழில் வாய்ப்பை நல்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.