கோவை : காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தைச் சேர்ந்த திரளானோர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.
கோவை : காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தைச் சேர்ந்த திரளானோர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.
முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் முழுமையாக செயல்பட முடியாத நிலை இருந்து வரும் நிலையில், காலி பணியிடங்களை நிரப்பாமல், பணிச்சுமையை அதிகரித்து வருவதைக் கண்டித்து தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, டாக்டர். முத்துலட்சுமி மகளிர் மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் உள்ள புதிய பதிப்பில் உள்ள சிக்கல் மற்றும் குளறுபடிகளை களைய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்புதல், பதிவேடுகளை குறைத்து சுருக்கமான பக்கங்களோடு அரசு வழங்கிட வேண்டும், செவிலியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும், அன்றைய செயல்பாடுகளை வாட்ஸ் அப் குரூப்பில் போட சொல்வதை தவிர்த்திட வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர்.
இதில் கோவை மாவட்ட தலைவர் தெய்வாத்தாள், செயலாளர் சுமதி, துணை தலைவர் நாகலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.