கோவை : தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சாதி ஆணவ படுகொலைகளைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை : தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சாதி ஆணவ படுகொலைகளைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தெலுங்கனா மாநிலத்தில் காதல் திருமணம் செய்த பிரணாய் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, நாட்டை உலுக்கும் வகையில் மேலும் ஒரு சம்பவமும் நடைபெற்றது. இந்த நிலையில், தொடர்ச்சியாக நடைபெறும் சாதி ஆணவ படுகொலைகளை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், தந்தை பெரியார் திராவிடர் கழகம்,விடுதலை சிறுத்தைகள் கட்சி,மக்கள் சிவில் உரிமை கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பிரணாய் மரணத்திற்கு நீதி கேட்டு முழக்கங்களை எழுப்பினர். சாதி ஆணவ படுகொலைகள் சட்டத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது எனவும், சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.