சென்னை: தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலை சென்னையில் தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவரது வீட்டில் இருந்து ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தொன்மையான சிலைகளை விற்க யாருக்கும் உரிமம் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் தனது வெட்டில் 100 ஆண்டுகள் பழமையான சிலைகளை இந்த தொழிலதிபர் வைத்திருப்பது தெரியவந்தது. அந்த சிலைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது வரை சிலைகள் மற்றும், கல்லில் செதுக்கப்பட்ட பொருட்கள் என 89 தொன்மையான பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். இந்த சிலைகள் அனைத்தும் தமிழக கோவில்களில் இருந்து மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட தொன்மையான சிலைகளை அரசு அருங்காட்சியகத்தில் வைக்க இடமில்லை என்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். கைப்பற்றப்பட்ட சிலைகளை சொந்த செலவில் தான் எடுத்துச் செல்லவேண்டி இருக்கிறது. அந்த சிலைகளை கும்பகோணம் கொண்டு செல்ல பணம் இல்லை. இதனை காவல்துறை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இது தொடர்பாக காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுத உள்ளேன்." என்றார்.