நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த கேரண்டிண் பகுதியில் சாலையில் மரம் விழுந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரி போன்ற பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழையுடன், காற்றும் வீசியது. இந்நிலையில், இன்று மதியம் கிண்ணக்கொரை கேரண்டிண் பகுதியில் இரண்டு மரங்கள் வேரோடு சாய்ந்தன.

சாலையில் மரம் விழுந்ததால் இவ்வழியாக வந்த அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இது குறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி மரத்தை அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.