கோவை: கோவை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளான குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் ரூ. 577.54 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளவிருக்கும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான நிறுவனம் ஒப்பந்தம் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் நிதி பெறப்பட்டு, நகரில் மூன்று கட்டங்களாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, இணைக்கப்பட்ட 11 உள்ளாட்சி அமைப்புகள், 40 வார்டுகளாக ஒருங்கிணைக்கப்பட்டு மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 100-ஆக உயர்த்தப்பட்டது.
முதற்கட்டமாக, இணைக்கப்பட்ட பகுதிகளான குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், அதற்கான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் திட்டஅறிக்கை தயாரிக்கப்பட்டது. குறிச்சி மற்றும் குனியமுத்தூர் (வார்டு எண். 87 முதல் 100 வரை) பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை தேர்வு செய்ய கடந்த ஏப்ரல் மாதம் டெண்டர் நடத்தப்பட்டது. அதில், சென்னையை சேர்ந்த எல்&டி நிறுவனம் டெண்டர் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதியில் ரூ. 577.54 கோடி மதிப்பீட்டில் 429 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, சென்னையை சேர்ந்த எல்&டி நிறுவனம் டெண்டர் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இப்பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். திட்டம் தொடங்கப்பட்டு 42 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது," என்றனர்.