கள்ளக்காதல் கிரிமினல் குற்றமில்லை: பரபரப்பு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்

டெல்லி: திருமண பந்தத்திற்கு வெளியே ஆணும், பெண்ணும் காதல் புரிவதும், பாலியல் உறவு மேற்கொள்வதும் கிரிமினல் குற்றச்செயல் இல்லை என்றும், தற்கொலைக்குத் தூண்டப்படாத வரை அது குற்றச்செயல் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி: திருமண பந்தத்திற்கு வெளியே ஆணும், பெண்ணும் காதல் புரிவதும், பாலியல் உறவு மேற்கொள்வதும் கிரிமினல் குற்றச்செயல் இல்லை என்றும், தற்கொலைக்குத் தூண்டப்படாத வரை அது குற்றச்செயல் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்திய தண்டனை சட்டமான சட்ட பிரிவு 497-ஐ நீக்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பை அளித்தது. ஒரு பெண்ணின் கணவர் அவருக்கு உரிமையாளர் அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

இந்திய தண்டனை சட்ட பிரிவுகளில் சில சர்ச்சைக்கு உரிய தண்டனை சட்டங்கள் உள்ளது. அதில் ஒரு தண்டனை சட்டமான சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டு இந்தியாவில் ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்னொரு சர்ச்சைக்கு உரிய சட்டமான இந்தியத் தண்டனைச் சட்டம் தான் இந்த 497. 

இந்தியத் தண்டனைச் சட்டம் 497 என்பது திருமண உறவுக்கு வெளியே பாலியல் உறவு கொள்வோருக்கு தண்டனை வழங்கும் சட்டமாகும். இதில் ஆண்களுக்குத்தான் தண்டனை உண்டு. பெண்களுக்குக் கிடையாது. ஒரு பெண் தனது கணவரின் அனுமதி அல்லாமல் வேறு ஒரு ஆணுடன் திருமணத்துக்கு அப்பாற்பட்டு உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று 497-ம் பிரிவு கூறுகிறது. ஆனால் இதில் அந்த பெண் தண்டிக்கப்பட மாட்டார். ஆண் மட்டுமே தண்டிக்கப்படுவார்.

கடந்த 1860-ல் இந்த சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் கைது செய்யப்படும் ஆண்கள், பாலியல் வன்புணர்வு என்ற குற்றத்தின் கீழ் தண்டனையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதற்கு 5 வருடம் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.

இந்த சட்டப்பிரிவிற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று இந்த சட்டப் பிரிவையே செல்லாது என்று கூறி விட்டது. திருமண பந்தத்திற்கு வெளியே ஆணும், பெண்ணும் காதல் புரிவதும், பாலியல் உறவு மேற்கொள்வதும் கிரிமினல் குற்றச் செயல் இல்லை என்றுள்ளது.

கணவர் என்பவர் பெண்ணின் உரிமையாளர் அல்ல. இருவரும் சமமானவர்கள். திருமண பந்தத்திற்கு வெளியே உறவில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் இல்லை. தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை என்பது சட்டவிரோதமாகும். தகாத உறவால் யாரும் தற்கொலை செய்து கொள்ளாதவரை இதை குற்றச்செயலாக கருத முடியாது. இதனால் அரசியல் சட்டத்தின் 497-வது பிரிவு சட்டவிரோதமானது என்று அதை நீக்கி உள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...